Skip to main content

உடல் சூட்டை தணித்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் வருண முத்திரை

வருண முத்திரை

பருவ நிலையில் மாற்றம் ஏற்படும் போது நமது உடலிலும் ஏராளமான மாற்றங்கள் ஏற்படுகிறது. அவ்வாறு ஏற்படும் மாறுதல்களை எளிய முத்திரைகளின் மூலமே சரிசெய்துகொள்ள முடியும்.


கோடையின் தாக்கங்களை சமாளிக்கும் சில எளிய முத்திரைகளில் ஒன்று வருண முத்திரை.
 

இந்த வருண முத்திரையின் வழியாகவே கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் மாறுதல்களை சரிசெய்துகொள்ள முடியும். நோய் உருவாகும் வரையில் காத்துக்கொண்டிராமல் கோடையின் துவக்கத்திலேயே இந்த முத்திரைகளைத் தொடர்ந்து செய்துவந்தால் வெயிலினால் உருவாகும் சிக்கல்கள் வராமல் தடுத்துக்கொள்ள முடியும்.

பஞ்சபூதங்கள் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை. ஒரு பூதத்தில் ஏற்படும் மாற்றங்கள் பிற பூதங்களிலும் மாற்றங்களை உருவாக்கும். கோடை காலத்தில் நிலத்திலுள்ள நீர் குறைவதால் நிலம் வெடித்து தரிசாகி விடுகிறது. நமது உடலை எடுத்துக் கொண்டால் கோடையின் வெப்பத்தால் உடல் சூடு அதிகரிக்கும்.
இந்த சூட்டைக் (நெருப்பை) குறைக்க
 வியர்வை என்னும் நீர் அதிகமாக உற்பத்தியாகும். இந்த இரு மாற்றங்களுமே பல கோடைகால பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணங்களாகின்றன.

உடலிலுள்ள நீர் வியர்வை வழியாக வெளியேறி, உடலில் நீரின் அளவு குறைந்துபோவதால் நீர்க்கடுப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளும் உருவாகிவிடுகின்றன. எனவே, கோடை காலத்தில் ஏற்படும் சிக்கல்களைச் சரிசெய்ய நெருப்பின் அளவை உடலில் குறைக்க வேண்டும் அல்லது நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். நெருப்பின் அளவை நேரடியாகக் குறைத்தால் இதயத்தின் இயக்கங்கள் பாதிக்கப்படும். எனவே நீரின் அளவை சமன்செய்வதே சரியான தந்திர யோக வழியாகும். 

அதற்கான முத்திரையே வருண முத்திரை!

வருண முத்திரையை எவ்வாறு செய்வது:

பெருவிரலை வளைத்து, ஐந்தாவது விரலின் (சிறுவிரல்) நுனிப் பகுதியோடு இணையுங்கள்.

சுட்டு விரல், நடுவிரல், மோதிர விரல் மூன்று விரல்களும் வளைவின்றி நேராக இருக்கட்டும்.

அமரும் முறை: * பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனம்.

ஆசனம் பற்றி தெரியாதவர்கள் சாதாரணமாக சம்மணமிட்டு அமர்ந்தும் (சுகாசனம்) செய்யலாம்.

கால்களை மடக்கி தரையில் அமரமுடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்யலாம்.

எந்த நிலையில் அமர்ந்து செய்தாலும், கழுத்தும் முதுகும் வளைவின்றி நேராக இருக்க வேண்டும். 

கவனம் முழுவதும் செய்யும் முத்திரையின்மீது பதிந்திருக்கட்டும்.

எவ்வளவு நேரம்?:  குறைந்தபட்சம் 24 நிமிடங்கள்.

காலையில் 12 நிமிடங்கள், மாலையில் 12 நிமிடங்கள் என பிரித்தும் செய்யலாம்.

உடற்சூடு மிக அதிகமாக உள்ளவர்கள் அதிகபட்சமாக 48 நிமிடங்கள் வரையிலும் (ஒரு நாளில்) செய்யலாம்.

ஒரே நேரத்தில் 48 நிமிடங்கள் செய்வது கடினமாக இருக்கும்.

காலையில் 16 நிமிடங்கள், மதியம் 16 நிமிடங்கள், மாலை அல்லது இரவில் 16 நிமிடங்கள் என மூன்று வேளையும் சேர்த்து 48 நிமிடங்கள் செய்யுங்கள்.

செய்வதால் என்ன பலன்?:

உடற் சூடு தணியும்

 உடலில் நீர் எனும் பூதம் சமநிலையை அடையும்.

 கோடையினால் உடலில் ஏற்படும் நீர் இழப்பு சரிசெய்யப்படும்.

 வியர்க்குரு மறையும்.

சூட்டுக் கட்டிகள் வராமல் தடுக்கப்படும். கட்டிகள் இருந்தால் அவை விரைவில் மறையும்.

தோல் வறட்சி மறைந்து, தோல் மறைந்து, தோல் மினுமினுப்பாகும்.

 தோலிலுள்ள சுருக்கங்கள் மறையும்.

 இளமையான தோற்றம் உருவாகும்.

 தாகம் தணியும்.

 உடலில் ரத்த ஓட்டம் சீரடையும்.

பரிந்துரை :- உகந்த பயிற்றுனர் உதவியுடன் செய்திடுக

என்றென்றும் உயிர்நேயத்துடன்….
வள்ளுவர் வள்ளலார் அறக்கட்டளை,
சென்னிமலை, ஈரோடு, தமிழகம், பாரதம் 
+919629188853, +917810040103
valluvarvallalar.blogspot.com      valluvarvallalar@gmil.com

 

Comments

Popular posts from this blog

உடல் சோர்வை போக்கும் பிருத்திவி எனப்படும் பூமி முத்திரை

பிருத்திவி எனப்படும் பூமி முத்திரை எல்லா   பிரச்சினைகளுக்கும்   முத்ரா   பயிற்சி   முறைகள்   நல்ல   தீர்வு தரக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் பிரித்வி என்ற பூமி முத்திரை பற்றி தெரிந்து கொள்வோம். சமஸ்கிருதத்தில் பிருத்வி என்ற சொல்லுக்கு பூமி என்று பொருள்படும், செய்முறை : மோதிரவிரல் நுனியால் பெருவிரல் நுனியை அழுத்தமாகத் தொட்டு ஏனைய மூன்று விரல்களையும் வளையாது நிமிர்த்தி பிடிக்கவும். தரையில் துண்டு அல்லது பெட்ஷீட் விரித்து, அதன் மேல் சப்பளங்கால் போட்டு அமர்ந்தோ, தரையில் பாதங்களைப் பதித்தபடி, நாற்காலியில் அமர்ந்தோ செய்யலாம். காலை, மாலை என வெறும் வயிற்றில், முறையே 20 நிமிடங்கள் செய்யலாம் அல்லது 10 நிமிடங்களுக்கு நான்கு வேளை செய்யலாம். 12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இதைச் செய்ய வேண்டாம். ஆரோக்கியமாக இருக்கும், 10-20 வயது வரையுள்ள ஆண்கள், இந்த முத்திரை செய்வதைத் தவிர்க்கலாம். வளர்ச்சிக் குறைபாடு உள்ளவர்கள் செய்யலாம். பலன்கள் : எந்தவித உடல் சோர்வினையும் நீக்கும், உடல் பலவீனமானவர்களுக்கு நிறையைக் கூட்டும், தோலினை பளபளப்பாக வைத்திருக்க உதவுவதோடு அ...

சைவ உணவின் ஆரோக்கிய நன்மைகள்

  சைவ உணவு பழக்கம் குறைந்த கொழுப்பு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி), அமெரிக்கர்களில் 3 பேரில் 1 பேருக்கு அதிக கொழுப்பு இருப்பதாக தெரிவிக்கிறது. ஒரு நபரின் இரத்தத்தில் அதிகப்படியான ‘கெட்ட’ எல்.டி.எல் கொழுப்பு இருக்கும்போது, ​​அது இரத்த நாளங்களின் உட்புறத்துடன் இணைகிறது மற்றும் பிளேக் உருவாக்க கட்டமைக்கிறது. இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கு இது ஒரு பெரிய ஆபத்து காரணி. ஒரு சைவ உணவு நேரடியாக இரத்த லிப்பிட் அளவைக் குறைக்கிறது அல்லது கொழுப்பின் அளவைக் குறைக்கிறது என்று எண்ணற்ற ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. உங்கள் கொழுப்பைக் குறைப்பதற்கான சிறந்த வழி, ‘கெட்ட’ வகையான கொழுப்பு-நிறைவுற்ற கொழுப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்பைக் கொண்ட உணவுகளைத் தவிர்ப்பது. இந்த வகையான கொழுப்புகளைக் கொண்ட உணவுகளில் வெண்ணெய், இறைச்சி மற்றும் முழு கொழுப்புள்ள பால் பொருட்கள் ஆகியவை அடங்கும்- சைவ உணவு உண்பவர்கள் தவிர்க்கும் அனைத்தும். குறைந்த இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தம்- அல்லது உயர் இரத்த அழுத்தம்- என்பது உங்கள் இரத்த நாளங்கள் வழியாக பாயும் இரத்தத்தின் சக்தி நாள்பட்ட அளவில் அதிகமாக இருக்கும்போத...