Skip to main content

Posts

பூச நட்சத்திர தினங்கள் (ஏப்ரல் 2022 வரை)

 
Recent posts

நச்சுகள் மற்றும் கெட்ட சிந்தனைகைளை அகற்றி நற்சிந்தனையும் தேக ஆரோக்கியமும் கொடுக்கும் சேபான முத்திரை

சேபான முத்திரை இரண்டு கைகளையும் ஒன்றோடொன்று கோர்த்துக் கொள்ளவும். இரண்டு கைகளின் ஆட்காட்டி விரல்களை மட்டும் விண் நோக்கி நேராக நிமிர்த்து கொள்ளவும். இரண்டு கைகளின் பெருவிரல்களையும் ஒன்றன் மீது ஒன்றாக பதிவு செய்யும் வைத்துக் கொள்ளவும். மற்ற விரல்களை ஒன்றோடொன்று கோர்த்து பிடித்தவாறு வைத்து கொள்ளவும். இந்த முத்திரையை அடி வயிற்று பகுதியில் இருக்குமாறு வைத்து கொள்ளவும். இந்த முத்திரையை தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை செய்யலாம். எந்தநேரத்திலும், எந்த இடத்திலும் எந்த விதமான ஆசன நிலையிலும் செய்யலாம். உடலில் உள்ள நச்சுகள் மற்றும் கெட்ட சிந்தனைகைளை அகற்றி நற்சிந்தனையும் தேக ஆரோக்கியமும் தரவல்லது. வியர்வை நன்கு வெளியேறச்செய்யும். சிறுநீரகம் சீராக இயங்கும். பெருங்குடலில் உணவுச் செரிமானம் முறைப்படி இயங்கும். சுவாச பாதை சீராகி புத்துணர்ச்சி அளிக்கும். மன அழுத்தத்தை போக்கி மன அமைதி அடையச் செய்யும். நல்லெண்ணங்கள் மேன்மையடையச் செய்யும். பரிந்துரை :- உகந்த பயிற்றுனர் உதவியுடன் செய்திடுக... என்றென்றும் உயிர்நேயத்துடன்…. வள்ளுவர் வள்ளலார் அறக்கட்டளை, சென்னிமலை, ஈரோடு, தமிழகம், ப...

உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும் பங்கஜ முத்திரை

பங்கஜ முத்திரை விரிப்பில் சப்பணம் இட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்துகொள்ள வேண்டும். பிறகு, நெஞ்சுக் குழிக்கு நேராக (அனாகத சக்கரத்துக்கு நேராக), கைவிரல்கள் உடலில் ஒட்டாத வண்ணம், ஒரு தாமரை மலர்ந்திருப்பதுபோன்று… அதாவது, இரண்டு கரங்களின் கட்டைவிரல்களும், சுண்டு விரல்களும் முழுமையாக ஒட்டியிருக்க, மற்ற விரல்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மலர்ச்சியாக விரித்துவைத்துக் கொள்ள வேண்டும் (படத்தைப் பார்க்கவும்). இனி, கண்களை மூடி 30 நிமிடங்கள் வரையிலும் மெளனமாக அமர்ந்திருக்கலாம். மன இறுக்கம் உள்ளவர்கள், தாமரை மொட்டு மெள்ள இதழ் விரிப்பது போன்று, முதலில் கைகளைக் குவித்து வைத்து, பின்னர் மெது மெதுவாக விரல்களை விரிக்கவும். இவ்வாறு விரிக்க குறைந்தது 3 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம்.இப்படி, பதினான்கு தடவைகள் செய்யவும். தினமும் அதிகாலை வேளையில் செய்து பயனடையலாம். இந்த முத்திரை பயிற்சி குளிர் காலங்களில் செய்வதை தவிர்க்கவேண்டும். செய்தால் நெஞ்சில் சளி கட்டும். முத்திரைப் பயிற்சிகள் குறைந்தது 15 நிமிடங்களும் அதிகபட்சம் 45 நிமிடங்கள் வரை செய்யலாம், இங்கு 45 நிமிடங்கள் செய்தால் நோயிலிருந்து உடனடியாக நிவாரணம் க...

மூளை செயல்பாட்டை சமன்செய்து மன அமைதி கொடுக்கும் அஞ்சலி முத்திரை

அஞ்சலி முத்திரை தரையில் நின்றுகொண்டோ, சப்பணம் இட்டு அமர்ந்தோ செய்யலாம். வணக்கம் வைப்பதற்கு கைகளை எப்படி வைக்கிறோமோ அதுதான் அஞ்சலி முத்திரை. அதாவது, கைகளானது மேலே, கீழே என ஏற்ற இறக்கமாக இருக்கக் கூடாது. இரண்டு கைகளுக்கும் நடுவே இடைவெளியும் இருக்கக் கூடாது. சரியான அளவில் சரியான அழுத்தத்தில் இருக்க வேண்டும். விரிப்பில் கிழக்கு நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். கண்களை மூடி இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஒரு 5 நிமிடங்கள் அமைதியாக மூச்சை கவனிக்கவும். இப்பொழுது இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றையன்று தொடுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். நமது இரண்டு பெருவிரல்களும் மார்புப் பகுதியில் தொடுமாறு வைக்கவும். இரண்டு கைகளும் இடைவெளியின்றி இணைந்திருக்க வேண்டும். நமது வலது கைவிரல்கள் இடது கை விரல்களைத் தொட்டுத் கொண்டிருக்கவும். தலையைச் சிறிது தாழ்த்தவும். கண்களை மூடியபடி இருக்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் இருக்கலாம். இதுபோல் காலை மாலை மூன்று முறைகள் செய்யலாம். மனித உடலில் நேர்சக்தி எதிர்சக்தி இரண்டும் உள்...

சுவாச கோளாறுகளை சரிசெய்யும் ஆதி முத்திரை

ஆதி முத்திரை   ஆதி என்பது எல்லாவற்றுக்கும் முந்தையது, பழைமையானது. இந்த முத்திரை ஆரம்ப காலம் முதலே செய்யப்பட்டுவருவதால் ‘ஆதி முத்திரை’ என்று பெயர் பெற்றுள்ளது. தாயின் வயிற்றில் இருக்கும்போது சிசு தன் கையில் இந்த முத்திரையை வைத்திருக்கும். நவீன ஸ்கேன் படத்தில் இதைக் காண முடியும். இந்த முத்திரை நமக்குப் புதிதானது அல்ல. பஞ்ச பூதங்களும் ஒடுங்கி நிற்கும் நிலையை இந்த முத்திரை தருவதால், வெளிப்புற ஈர்ப்புகள் மற்றும் கவனச்சிதறல்களில் இருந்து விடுபட இந்த முத்திரை உதவும். கட்டை விரலை மடக்கி, சுண்டு விரலின் மேட்டுப் பகுதியில் வைத்து அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரலை மடக்கி, கட்டை விரலைச் சுற்றிப் பிடிக்க வேண்டும். விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டு, நேராக அமர்ந்தோ, நாற்காலியில் நேராக அமர்ந்து பாதம் தரையில் பதியும்படியோ இரு கைகளாலும் இந்த முத்திரையைப் பிடிக்க வேண்டும். தினமும், 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். பலன்கள் : நுரையீரலின் மேல்பகுதிக்கு ஆக்சிஜன் செல்ல உதவுகிறது. முறையற்ற சுவாசம் சரியாகும். அனைத்து சுவாசப் பிரச்சனைகளும் தீரும். தலை, கழு...

பஞ்சபூத சக்தியை ஒருங்கே கொடுக்கும் முகுள முத்திரை

  முகுள முத்திரை வெகு இலகுவான முத்திரைகளில் இதுவும் ஒன்று. நான்கு விரல் நுனிகளையும் பெரு விரல் நுனியுடன் இணைப்பதே முகுள முத்திரை. அதிகமாக அழுத்தம் தராமல் சற்று தளர்வாக பிடிக்க வேண்டும். நமது உடலில் ஏதாவது ஒரு பாகம் நோய்வாய்ப்பட்டிருந்தால் அந்த பகுதியில் இந்த முத்திரையைப் பிடித்து ஐந்து நிமிடங்கள் வரை மனசக்தியை அந்த உறுப்பின் மேல் செலுத்துவதன் மூலம் அந்த உறுப்பு உறுதி அடைவதுடன் நோயும் படிப்படியாகக் குறையுமாம். பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து உடலில் நோய்வாய்ப்பட்ட இடத்தில் பிடிக்கும் போது அந்த இடத்திற்கு தேவையான ஆற்றலை வழங்குவதே இந்த முத்திரையின் தத்துவமாகும். உடல் நலக்கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த முத்திரையை தொடர்ந்து 30 நாட்கள் செய்து வந்தால் நல்ல பலனை காணலாம். இந்த முத்திரையை செய்வதன் மூலம் உடலின் எல்லா பாகங்களுக்கும் அவற்றின் இயற்கையான வலிமை பெறலாம் பரிந்துரை :- உகந்த பயிற்றுனர் உதவியுடன் செய்திடுக                         என்றென்றும் உயிர்நேயத்துடன்…. வள்ளுவர் வள்ளலார் அறக்கட்டளை, சென்னிமலை, ஈரோடு, தமிழகம், ப...

தண்டுவடம் தோள்ப்பட்டையை வலுவடையச் செய்யும் அனுசான முத்திரை

அனுசான முத்திரை படத்தில் உள்ளது போல் ஆட்காட்டி விரலை நேராக வைத்துக் கொள்ளவும். நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் உள்ளங்கை தொடுமாறு இருக்கவேண்டும். கட்டை விரலை நடுவிரல் மீது வைத்து லேசாக அழுத்தவும். இதனை இரண்டு கைகளிலும் மாற்றி செய்யலாம். கழுத்து வலி உள்ளவர்கள் இந்த முத்திரையை செய்யலாம். இதனை நின்று கொண்டும், அமர்ந்து கொண்டும் செய்யலாம். தினமும் காலையிலும் மாலையிலும் 15 அல்லது 20 நிமிடம் செய்ய வேண்டும். இந்த முத்திரையை செய்வதால் தண்டுவடம் வலுவடையும். தோல்பட்டை தசைகளை வலுவாக்கும். பரிந்துரை :- உகந்த பயிற்றுனர் உதவியுடன் செய்திடுக என்றென்றும் உயிர்நேயத்துடன்…. வள்ளுவர் வள்ளலார் அறக்கட்டளை, சென்னிமலை, ஈரோடு, தமிழகம், பாரதம்  +919629188853, +917810040103 valluvarvallalar.blogspot.com      valluvarvallalar@gmil.com