சேபான முத்திரை
இரண்டு கைகளையும் ஒன்றோடொன்று
கோர்த்துக் கொள்ளவும்.
இரண்டு கைகளின் ஆட்காட்டி விரல்களை மட்டும் விண் நோக்கி நேராக நிமிர்த்து கொள்ளவும்.
இரண்டு கைகளின் பெருவிரல்களையும்
ஒன்றன் மீது ஒன்றாக பதிவு செய்யும் வைத்துக் கொள்ளவும்.
மற்ற விரல்களை ஒன்றோடொன்று கோர்த்து
பிடித்தவாறு வைத்து கொள்ளவும்.
இந்த முத்திரையை அடி வயிற்று பகுதியில்
இருக்குமாறு வைத்து கொள்ளவும்.
இந்த முத்திரையை தினமும் 10 முதல்
15 நிமிடங்கள் வரை செய்யலாம்.
எந்தநேரத்திலும், எந்த இடத்திலும்
எந்த விதமான ஆசன நிலையிலும் செய்யலாம்.
உடலில் உள்ள நச்சுகள் மற்றும்
கெட்ட சிந்தனைகைளை அகற்றி நற்சிந்தனையும் தேக ஆரோக்கியமும் தரவல்லது.
வியர்வை நன்கு வெளியேறச்செய்யும்.
சிறுநீரகம் சீராக இயங்கும்.
பெருங்குடலில் உணவுச் செரிமானம்
முறைப்படி இயங்கும்.
சுவாச பாதை சீராகி புத்துணர்ச்சி
அளிக்கும்.
மன அழுத்தத்தை போக்கி மன அமைதி
அடையச் செய்யும்.
நல்லெண்ணங்கள் மேன்மையடையச் செய்யும்.
பரிந்துரை :- உகந்த பயிற்றுனர் உதவியுடன் செய்திடுக...

Comments
Post a Comment