அஞ்சலி முத்திரை
தரையில் நின்றுகொண்டோ, சப்பணம் இட்டு அமர்ந்தோ செய்யலாம். வணக்கம் வைப்பதற்கு
கைகளை எப்படி வைக்கிறோமோ அதுதான் அஞ்சலி முத்திரை. அதாவது, கைகளானது மேலே, கீழே என
ஏற்ற இறக்கமாக இருக்கக் கூடாது. இரண்டு கைகளுக்கும் நடுவே இடைவெளியும் இருக்கக் கூடாது.
சரியான அளவில் சரியான அழுத்தத்தில் இருக்க வேண்டும்.
விரிப்பில் கிழக்கு நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில்
அமரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். கண்களை மூடி இரு நாசி வழியாக மெதுவாக
மூச்சை உள் இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஒரு 5 நிமிடங்கள் அமைதியாக மூச்சை
கவனிக்கவும்.
இப்பொழுது இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றையன்று தொடுமாறு
வைத்துக் கொள்ள வேண்டும். நமது இரண்டு பெருவிரல்களும் மார்புப் பகுதியில் தொடுமாறு
வைக்கவும். இரண்டு கைகளும் இடைவெளியின்றி இணைந்திருக்க வேண்டும். நமது வலது கைவிரல்கள்
இடது கை விரல்களைத் தொட்டுத் கொண்டிருக்கவும். தலையைச் சிறிது தாழ்த்தவும். கண்களை
மூடியபடி இருக்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் இருக்கலாம். இதுபோல் காலை மாலை மூன்று
முறைகள் செய்யலாம்.
மனித உடலில் நேர்சக்தி எதிர்சக்தி இரண்டும் உள்ளது. நமது வலது கை நேர் சக்தி,
இடது கை எதிர்சக்தி. நம் இரு கைகளும் அஞ்சலி முத்திரையில் இணையும் பொழுது சக்தி ஓட்டம்
சிறப்பாக ஏற்பட்டு நிறைவு பெறுகின்றது. இதன் காரணமாக உடலில் பிராண சக்தி சரியாக, நிலையாக
இருக்கும்.
மூளையின் வலது மற்றும் இடதுபுறச் செயல்பாட்டை சமன் செய்கிறது. அமைதி, தெளிவு
கிடைக்கும். விரல்கள், கைகள், மணிக்கட்டு, முழங்கை வலுப்பெறுகிறது. உடலுக்கு சக்தி
மற்றும் பலம் கிடைக்கிறது.
இதயத் தசைகளுக்கு வலு கிடைக்கிறது. படபடப்பு நீங்கி இதயத்
துடிப்புச் சீராகிறது. மனப்பிரச்சனைகள் மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.
இந்த முத்திரையை நமது இதயத்திற்கு நேராக வைத்து செய்தால்
நமது மனம் அமைதி பெறும். நமது மூளையின் இருபக்கமும் அதாவது வலது இடது பக்க மூளைகளும்
அமைதி பெறும்.
மூளைக்கு எப்பொழுதும் ஓய்வு கொடுக்காமல் சிந்தனை செய்து
கொண்டே இருந்தால் மூளை சூடேறும். அஞ்சலி முத்திரையில் மூளைக்கு ஓய்வு கிடைக்கின்றது.
மூளை அமைதியாகின்றது. மீண்டும் சக்தி பெற்று சிறப்பாக இயங்கும்.
மன அழுத்தத்தினால் இன்று பல வகையான வியாதிகள் வருகின்றது.
குறிப்பாக இரத்த அழுத்தம், நீரிழிவு முதலிய நோய்களுக்கு முக்கிய காரணம் மன அழுத்தமே.
இந்த அஞ்சலி முத்திரை மன அழுத்தத்தினால் வலது, இடது மூளையில் ஏற்பட்ட அதிர்வுகளை சரி
செய்வதோடு மட்டுமல்ல, மன அமைதியையும் தரவல்லது.
விரல் நுனிகள் அழுத்தத்துடன் தொடுவதால் நமது உடலுக்கு
அதிக சக்தி கிடைக்கிறது. இந்த முத்திரை பயிற்சியால் நமது உறவினர்களிடம் மகிழ்ச்சியான
உறவும் நல்ல நண்பர்களின் தொடர்பும் அதிகரிக்கிறது.
பரிந்துரை :- உகந்த பயிற்றுனர் உதவியுடன் செய்திடுக

Comments
Post a Comment