பிருத்திவி எனப்படும் பூமி முத்திரை எல்லா பிரச்சினைகளுக்கும் முத்ரா பயிற்சி முறைகள் நல்ல தீர்வு தரக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் பிரித்வி என்ற பூமி முத்திரை பற்றி தெரிந்து கொள்வோம். சமஸ்கிருதத்தில் பிருத்வி என்ற சொல்லுக்கு பூமி என்று பொருள்படும், செய்முறை : மோதிரவிரல் நுனியால் பெருவிரல் நுனியை அழுத்தமாகத் தொட்டு ஏனைய மூன்று விரல்களையும் வளையாது நிமிர்த்தி பிடிக்கவும். தரையில் துண்டு அல்லது பெட்ஷீட் விரித்து, அதன் மேல் சப்பளங்கால் போட்டு அமர்ந்தோ, தரையில் பாதங்களைப் பதித்தபடி, நாற்காலியில் அமர்ந்தோ செய்யலாம். காலை, மாலை என வெறும் வயிற்றில், முறையே 20 நிமிடங்கள் செய்யலாம் அல்லது 10 நிமிடங்களுக்கு நான்கு வேளை செய்யலாம். 12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இதைச் செய்ய வேண்டாம். ஆரோக்கியமாக இருக்கும், 10-20 வயது வரையுள்ள ஆண்கள், இந்த முத்திரை செய்வதைத் தவிர்க்கலாம். வளர்ச்சிக் குறைபாடு உள்ளவர்கள் செய்யலாம். பலன்கள் : எந்தவித உடல் சோர்வினையும் நீக்கும், உடல் பலவீனமானவர்களுக்கு நிறையைக் கூட்டும், தோலினை பளபளப்பாக வைத்திருக்க உதவுவதோடு அ...
Comments
Post a Comment