Skip to main content

இளமையும் அழகும் தொலையாமல் காக்கும் சூன்ய முத்திரை


 சூன்ய முத்திரை

இன்று மனிதர்கள் கவலையாலும், டென்ஷனாலும், மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டு நீரிழிவு, இரத்த அழுத்தம், மூட்டு வலி, முதுகு வலி, இதய நோய் போன்ற பல நோய்களால் அவதிப்படுகின்றனர். என்ன காரணம்? இந்த உடல் என்ற இயந்திரத்தை சரியாக இயக்கத் தெரியவில்லை. உடலில் வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மூன்று முக்கிய அங்கங்கள் உள்ளன.

இளமையும் அழகும் தரும் சூன்ய முத்திரையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

காது வலி, கழுத்துவலி, தைராய்டு பிரச்சனைகளை நீக்கும் சூன்ய முத்திரை. பொதுவாக நிறைய மனிதர்கள் காதுவலியினால் அவதிப்படுகின்றனர். சிலருக்கு காதில் அதிக அழுக்கு சேர்வதால் காதுவலி வரும். சிலருக்கு குளிக்கும் பொழுது காதில் நீர் சென்றுவிடும், அதனால் வலி வருகின்றது. மேலும் உடலில் சளி அதிகமானால் காதுவலி வரும். உடல் சூடு அதிகமானால் காது வலி வரும். காதுவலி பற்றி கவலைப்பட்டவர்கள் இங்கே கொடுத்துள்ள முத்திரையை அதாவது சூன்ய முத்திரையை செய்தால் காது வலி பறந்து விடும். காதுவலி இல்லாதவர்களும் இதனைப் பயிலுங்கள். காதில் உள்ள நரம்புகள் பலப்படும். எவ்வளவு வயதானாலும் காதுவலி வராமல் தடுக்கப்படும். இன்றைய நவீன உலகில் மன அழுத்தம், டென்ஷன், படபடப்பினால் கழுத்து நரம்புகளுக்கு இரத்தம் சரியாகச் செல்லாமல் கழுத்து வலி வரும். மூளையிலிருந்து பிரியும் சிந்தனையைத் தூண்டும் நரம்புகள் அதிக சிந்தனையினால் இரத்த ஓட்டம் சரியாகச் செல்லாமல் பாதிக்கப்பட்டு அதனால் கழுத்துவலி வரும்இருசக்கர வாகனம் அதிகம் ஓட்டினால் கழுத்துவலி வரும். கம்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு கழுத்து வலி வரும். அதிகமான எடையை சுமந்தால் கழுத்து வலி வரும். இந்த கழுத்துவலிக்கு பல மருந்துகள் சாப்பிட்டும் நிரந்தர தீர்வு கிடைக்காமல் கழுத்து வலியுடன் மனதில் கவலை என்ற வலியும் வந்துவிடுகின்றது. அவர்கள் இனி கவலைப்பட வேண்டாம். நம்பிக்கையுடன் தினமும் பதினைந்து நிமிடங்கள் காலை, மதியம், மாலை மூன்று வேளைகள் பயிற்சி செய்யுங்கள். கழுத்துப் பகுதி நரம்புகள் பலப்படும். கழுத்துவலி நீங்கும். கவலை வேண்டாம்.
இவ்வளவு அற்புத பலன்களைத் தரும் சூன்ய முத்திரையை எப்படி செய்வது என்பதை இப்பொழுது பார்ப்போம்.
சூன்ய முத்திரை செய்முறை
முதலில் நல்ல சுத்தமான காற்றோட்டம் உள்ள இடத்தில் தரையில் ஒரு மேட் விரித்து அதில் பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி அமரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். மூன்று முதல் ஐந்து முறை மூச்சை இரு நாசி வழியாக மிக மெதுவாக இழுத்து, மிக மெதுவாக வெளிவிடவும். பின் நமது நடுவிரலை கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டைவிரலால் இலேசாக அழுத்தம் கொடுக்கவும். மீதி விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும் (படத்தை பார்க்க) இந்த நிலையில் முதலில் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். ஒரு பதினைந்து நாட்கள் கழித்து பத்து நிமிடங்கள் இருக்கவும். செய்து முடித்தவுடன் கை விரல்களை சாதாரணமாக வைத்து ஓரு நிமிடம் கண்களை மூடி மூச்சை மட்டும் கவனிக்கவும். பின் எழுந்து விடலாம்.
இந்த முத்திரை செய்யும் பொழுது கவனிக்க வேண்டியவை
முத்திரை செய்யும் பொழுது கவனம், சிந்தனை வேறெங்கும் செல்லக் கூடாது. அதற்கு உங்கள் கவனத்தை விரலில் கொடுக்கும் அழுத்தத்தில் நிலை நிறுத்தவும். நம்பிக்கையுடன் செய்யுங்கள். முத்திரையில் இருக்கும் பொழுது உங்கள் மூச்சோட்டத்தை தியானிக்கலாம். முத்திரையை தனிமையில் அமர்ந்து செய்யுங்கள். பயிற்சியின் பொழுது பேசக்கூடாது. குறிப்பாக செல்போனை அணைத்துவிடுங்கள்.
இது ஒரு தெய்வீகக் கலை. நம் உடம்பில் உள்ள அற்புத ஆற்றலை வளர்க்கும் கலை. நம் சித்தர்கள் பல வருடங்கள் தவம் செய்து உடலை ஆராய்ச்சி செய்து நரம்பு மண்டலங்கள் சிறப்பாக இயங்கச் செய்ய அருளிய அருமையான கலை என்பதை உள்ளத்தில் நிறுத்தி நிதானமாக, பொறுமையாக, அன்புடன் பயிற்சி செய்யுங்கள்.
முதலில் மனிதன் தன்னை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தன் உடலை, உடல் உறுப்புக்களை நேசிக்கும் அற்புதக்கலைதான் இந்த முத்திரையாகும். சூன்ய முத்திரையை செய்து அனைவரும் இளமையுடன் அழகுடன், அழகாக வாழுங்கள்.

பரிந்துரை :- உகந்த பயிற்றுனர் உதவியுடன் செய்திடுக

என்றென்றும் உயிர்நேயத்துடன்….
வள்ளுவர் வள்ளலார் அறக்கட்டளை,
சென்னிமலை, ஈரோடு, தமிழகம், பாரதம் 
+919629188853, +917810040103

valluvarvallalar.blogspot.com      valluvarvallalar@gmil.com


Comments

Popular posts from this blog

உடல் சோர்வை போக்கும் பிருத்திவி எனப்படும் பூமி முத்திரை

பிருத்திவி எனப்படும் பூமி முத்திரை எல்லா   பிரச்சினைகளுக்கும்   முத்ரா   பயிற்சி   முறைகள்   நல்ல   தீர்வு தரக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் பிரித்வி என்ற பூமி முத்திரை பற்றி தெரிந்து கொள்வோம். சமஸ்கிருதத்தில் பிருத்வி என்ற சொல்லுக்கு பூமி என்று பொருள்படும், செய்முறை : மோதிரவிரல் நுனியால் பெருவிரல் நுனியை அழுத்தமாகத் தொட்டு ஏனைய மூன்று விரல்களையும் வளையாது நிமிர்த்தி பிடிக்கவும். தரையில் துண்டு அல்லது பெட்ஷீட் விரித்து, அதன் மேல் சப்பளங்கால் போட்டு அமர்ந்தோ, தரையில் பாதங்களைப் பதித்தபடி, நாற்காலியில் அமர்ந்தோ செய்யலாம். காலை, மாலை என வெறும் வயிற்றில், முறையே 20 நிமிடங்கள் செய்யலாம் அல்லது 10 நிமிடங்களுக்கு நான்கு வேளை செய்யலாம். 12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இதைச் செய்ய வேண்டாம். ஆரோக்கியமாக இருக்கும், 10-20 வயது வரையுள்ள ஆண்கள், இந்த முத்திரை செய்வதைத் தவிர்க்கலாம். வளர்ச்சிக் குறைபாடு உள்ளவர்கள் செய்யலாம். பலன்கள் : எந்தவித உடல் சோர்வினையும் நீக்கும், உடல் பலவீனமானவர்களுக்கு நிறையைக் கூட்டும், தோலினை பளபளப்பாக வைத்திருக்க உதவுவதோடு அ...

சைவ உணவின் ஆரோக்கிய நன்மைகள்

  சைவ உணவு பழக்கம் குறைந்த கொழுப்பு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி), அமெரிக்கர்களில் 3 பேரில் 1 பேருக்கு அதிக கொழுப்பு இருப்பதாக தெரிவிக்கிறது. ஒரு நபரின் இரத்தத்தில் அதிகப்படியான ‘கெட்ட’ எல்.டி.எல் கொழுப்பு இருக்கும்போது, ​​அது இரத்த நாளங்களின் உட்புறத்துடன் இணைகிறது மற்றும் பிளேக் உருவாக்க கட்டமைக்கிறது. இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கு இது ஒரு பெரிய ஆபத்து காரணி. ஒரு சைவ உணவு நேரடியாக இரத்த லிப்பிட் அளவைக் குறைக்கிறது அல்லது கொழுப்பின் அளவைக் குறைக்கிறது என்று எண்ணற்ற ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. உங்கள் கொழுப்பைக் குறைப்பதற்கான சிறந்த வழி, ‘கெட்ட’ வகையான கொழுப்பு-நிறைவுற்ற கொழுப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்பைக் கொண்ட உணவுகளைத் தவிர்ப்பது. இந்த வகையான கொழுப்புகளைக் கொண்ட உணவுகளில் வெண்ணெய், இறைச்சி மற்றும் முழு கொழுப்புள்ள பால் பொருட்கள் ஆகியவை அடங்கும்- சைவ உணவு உண்பவர்கள் தவிர்க்கும் அனைத்தும். குறைந்த இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தம்- அல்லது உயர் இரத்த அழுத்தம்- என்பது உங்கள் இரத்த நாளங்கள் வழியாக பாயும் இரத்தத்தின் சக்தி நாள்பட்ட அளவில் அதிகமாக இருக்கும்போத...

உடல் சூட்டை தணித்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் வருண முத்திரை

வருண முத்திரை பருவ நிலையில் மாற்றம் ஏற்படும் போது நமது உடலிலும் ஏராளமான மாற்றங்கள் ஏற்படுகிறது. அவ்வாறு ஏற்படும் மாறுதல்களை எளிய   முத்திரைகளின் மூலமே சரிசெய்துகொள்ள முடியும். கோடையின் தாக்கங்களை சமாளிக்கும் சில எளிய முத்திரைகளில் ஒன்று வருண முத்திரை.   இந்த வருண முத்திரையின் வழியாகவே கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் மாறுதல்களை சரிசெய்துகொள்ள முடியும். நோய் உருவாகும் வரையில்   காத்துக்கொண்டிராமல் கோடையின் துவக்கத்திலேயே இந்த முத்திரைகளைத் தொடர்ந்து செய்துவந்தால் வெயிலினால் உருவாகும் சிக்கல்கள் வராமல்   தடுத்துக்கொள்ள முடியும். பஞ்சபூதங்கள் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை. ஒரு பூதத்தில் ஏற்படும் மாற்றங்கள் பிற   பூதங்களிலும் மாற்றங்களை உருவாக்கும். கோடை காலத்தில் நிலத்திலுள்ள நீர் குறைவதால் நிலம் வெடித்து தரிசாகி விடுகிறது. நமது உடலை   எடுத்துக் கொண்டால் கோடையின் வெப்பத்தால் உடல் சூடு அதிகரிக்கும். இந்த சூட்டைக் (நெருப்பை) குறைக்க   வியர்வை என்னும் நீர் அதிகமாக உற்பத்தியாகும். இந்த இரு மாற்றங்களுமே பல கோடைகால பிரச்சினைக...