பிராண முத்திரை
நம் உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப்
பிராண முத்திரை உதவும். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு
முதலியன அகலும். கண்ணாடி இன்றிச் சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு அதிகரிக்கும்.
இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நனிகள் தொடுமாறு
வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன் அதிகரிக்கும்.
எல்லா வயதுக்காரர்களும் தியான
முத்திரையை மேற்கொள்ளலாம், பிறகு உங்கள் வியாதிக்குரிய முத்திரையைச் செய்ய வேண்டும்.
தினமும் காலையில் இருபது நிமிடங்கள்
உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து தியான நிலையில் அமருங்கள்.
நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும் விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ
தேவையில்லை. இதனால் நோய்கள் குணமாவதுடன் உடலில் எதிர்ப்புச்சக்தி வளரும், மனவளமும்
ஆரோக்கியமாகத் திகழும்.
காது நன்கு கேட்க: காதில் வலி என்றால்
கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நாற்பது நிமிடங்கள்
இதுபோல் அமர்ந்தால் காதுவலி பறந்து
போகும். காது கேளாதவர்கள் இந்த ஷன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது
கேட்க ஆரம்பிக்கும்.
இந்த முத்திரையை 10 நிமிடங்கள் செய்தால், உடலில் உள்ள உயிர் சக்தி (Energy
level) அதிகரிக்கும். பிரச்சனைகளின் வீரியம் குறையும். இடுப்பு, முதுகு வலிகளால் அவதிப்படும்
போது, இந்த முத்திரையைச் செய்துவந்தால், வலியின் வீரியம் குறைந்து, நாளடைவில் குணமாகும்.
கண்ணாடி அணிந்திருப்பவர்கள், தினமும் 40 நிமிடங்கள் தொடர்ந்து
மூன்று மாதங்களுக்குப் பிராண முத்திரை செய்தால், பார்வைத் திறன் மேம்படும். கிட்டப்பார்வை, தூரப் பார்வை பிரச்சனைகள் சரியாகும். தொடர்ந்து 40 நிமிடங்கள்
செய்ய முடியவில்லை எனில், ரிலாக்ஸ் செய்துகொண்டு மீண்டும் செய்யலாம். 10 நிமிடங்களாகப்
பிரித்தும் செய்யலாம்.
சிலருக்கு இந்த முத்திரை செய்யும்போது கண் எரிச்சல்,
கண்களில் நீர் வழிதல், கண் பொங்குதல் போன்ற பிரச்சனைகள் வரலாம். ஒரு பஞ்சை, சாதாரண
நீரில் நனைத்து, கண்களின் மேல் வைத்துக்கொள்ளவும். பிறகு, இளஞ்சூடான நீரில் பஞ்சை நனைத்து,
கண்களின் மேல் வைக்க வேண்டும். இப்படி மூன்று நிமிடங்கள் வரை செய்ய, கண் பிரச்னைகள்
சரியாகும். இரவு நேரம், பௌர்ணமி நிலவை 15 நிமிடங்கள் பார்த்தாலும் இந்த மூன்று பிரச்சனைகளும்
சரியாகிவிடும்.
பிராண முத்திரையைச் செய்யும்போது, கை நடுக்கம் ஏற்பட்டால், செய்வதை நிறுத்தவும்.
பிராண சக்தி அதிகமாகிவிட்டதை கைநடுக்கத்தின் மூலம் உடல் உணர்த்துகிறது. அதீத இயக்கங்கள்
(Aggressive behaviour) கொண்டவர்கள், இதை செய்யக் கூடாது.
பரிந்துரை :- உகந்த பயிற்றுனர் உதவியுடன் செய்திடுக

Comments
Post a Comment