Skip to main content

Posts

உடல் நடுக்கத்தை குறைக்கும் மேரு முத்திரை

அக்னி வர்த்தக் என்கிற மேரு முத்திரை இது குளிரினால் ஏற்படும் நடுக்கத்தை குறைத்து காய்ச்சலின் நிவாரணியாக அமைகின்றது, உடல் பலவீனத்தை இல்லாது செய்யும் முத்திரை இதுவாகும். உடலில் நெருப்பு எனும் பஞ்சபூத சக்தியை அதிகரிக்கும் முத்திரையாகும். செய்முறை : பெருவிரலை மேல் நோக்கி நிமிர்த்திய வண்ணம் பிடித்து ஏனைய விரல்களை மடக்கி முஷ்டியை ஆக்கிக் கொள்வதன் மூலம் இதனை செய்ய முடியும் பலன்கள் : இதனால் குளிரினால் ஏற்படும் நடுக்கத்தை குறைத்து காய்ச்சலின் நிவாரணியாக அமைகின்றது, உடல் பலவீனத்தை இல்லாது செய்வதோடு குளிர் காலனியையின் போது மிகவும் உகந்த முத்திரையாகவும் கொள்ளப்படுகின்றது. பரிந்துரை :- உகந்த பயிற்றுனர் உதவியுடன் செய்திடுக என்றென்றும் உயிர்நேயத்துடன்…. வள்ளுவர் வள்ளலார் அறக்கட்டளை, சென்னிமலை, ஈரோடு, தமிழகம், பாரதம்  +919629188853, +917810040103 valluvarvallalar.blogspot.com      valluvarvallalar@gmil.com

உடல் சூட்டை தணித்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் வருண முத்திரை

வருண முத்திரை பருவ நிலையில் மாற்றம் ஏற்படும் போது நமது உடலிலும் ஏராளமான மாற்றங்கள் ஏற்படுகிறது. அவ்வாறு ஏற்படும் மாறுதல்களை எளிய   முத்திரைகளின் மூலமே சரிசெய்துகொள்ள முடியும். கோடையின் தாக்கங்களை சமாளிக்கும் சில எளிய முத்திரைகளில் ஒன்று வருண முத்திரை.   இந்த வருண முத்திரையின் வழியாகவே கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் மாறுதல்களை சரிசெய்துகொள்ள முடியும். நோய் உருவாகும் வரையில்   காத்துக்கொண்டிராமல் கோடையின் துவக்கத்திலேயே இந்த முத்திரைகளைத் தொடர்ந்து செய்துவந்தால் வெயிலினால் உருவாகும் சிக்கல்கள் வராமல்   தடுத்துக்கொள்ள முடியும். பஞ்சபூதங்கள் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை. ஒரு பூதத்தில் ஏற்படும் மாற்றங்கள் பிற   பூதங்களிலும் மாற்றங்களை உருவாக்கும். கோடை காலத்தில் நிலத்திலுள்ள நீர் குறைவதால் நிலம் வெடித்து தரிசாகி விடுகிறது. நமது உடலை   எடுத்துக் கொண்டால் கோடையின் வெப்பத்தால் உடல் சூடு அதிகரிக்கும். இந்த சூட்டைக் (நெருப்பை) குறைக்க   வியர்வை என்னும் நீர் அதிகமாக உற்பத்தியாகும். இந்த இரு மாற்றங்களுமே பல கோடைகால பிரச்சினைக...

பார்வைத்திறன் அதிகரிக்க உதவும் பிராண முத்திரை

பிராண முத்திரை நம் உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண முத்திரை உதவும். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும். கண்ணாடி இன்றிச் சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு அதிகரிக்கும்.   இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நனிகள் தொடுமாறு வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன்   அதிகரிக்கும். எல்லா வயதுக்காரர்களும் தியான முத்திரையை மேற்கொள்ளலாம், பிறகு உங்கள் வியாதிக்குரிய முத்திரையைச் செய்ய வேண்டும். தினமும் காலையில் இருபது   நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும் விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ தேவையில்லை. இதனால் நோய்கள் குணமாவதுடன் உடலில் எதிர்ப்புச்சக்தி வளரும், மனவளமும் ஆரோக்கியமாகத் திகழும். காது நன்கு கேட்க: காதில் வலி என்றால் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இதுபோல் அமர்ந்தால்   காதுவலி பறந்து போகும். காது கேளாதவர்கள் இந்த ஷன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால...

இளமையும் அழகும் தொலையாமல் காக்கும் சூன்ய முத்திரை

  சூன்ய முத்திரை இன்று மனிதர்கள் கவலையாலும், டென்ஷனாலும், மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டு நீரிழிவு, இரத்த அழுத்தம், மூட்டு வலி, முதுகு வலி, இதய நோய் போன்ற பல நோய்களால் அவதிப்படுகின்றனர். என்ன காரணம்? இந்த உடல் என்ற இயந்திரத்தை சரியாக இயக்கத் தெரியவில்லை. உடலில் வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மூன்று முக்கிய அங்கங்கள் உள்ளன. இளமையும் அழகும் தரும் சூன்ய முத்திரையை செய்வது எப்படி என்று பார்க்கலாம். காது வலி, கழுத்துவலி, தைராய்டு பிரச்சனைகளை நீக்கும் சூன்ய முத்திரை. பொதுவாக நிறைய மனிதர்கள் காதுவலியினால் அவதிப்படுகின்றனர். சிலருக்கு காதில் அதிக அழுக்கு சேர்வதால் காதுவலி வரும். சிலருக்கு குளிக்கும் பொழுது காதில் நீர் சென்றுவிடும், அதனால் வலி வருகின்றது. மேலும் உடலில் சளி அதிகமானால் காதுவலி வரும். உடல் சூடு அதிகமானால் காது வலி வரும். காதுவலி பற்றி கவலைப்பட்டவர்கள் இங்கே கொடுத்துள்ள முத்திரையை அதாவது சூன்ய முத்திரையை செய்தால் காது வலி பறந்து விடும். காதுவலி இல்லாதவர்களும் இதனைப் பயிலுங்கள் . காதில் உள்ள நரம்புகள் பலப்படும் . எவ்வளவு வயதானாலும் காதுவலி வராமல் தடுக்கப்படும்...